திரு.இராஜகோபாலாச்சாரியார்அவர்கள்1937இ ல் இந்தியைக் கொண்டு வந்ததன் உள்நோக்கமே சமஸ்கிருதத்துக்குச் செல்வாக்கு கொஞ்சம் கொஞ்சமாகச் சரிந்து வருவதைத் தடுத்து அதை உயர்த்தவும், அந்த சமஸ்கிருத எதிர்ப்பு உணர்ச்சியை அழிக்கவுமேயாகும். இதை அவர் வெளிப் படையாகவே பல கூட்டங்களில் சொற்பொழிவுகளின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இதை நாம் இப்பொழுது விட்டால் நமது இனத்திற்கும், தன்மானத்திற்கும், உரிமைக்கும் பேராபத்து என்று கருதித்தான், ஆச்சாரியாரின் கட்டாய இந்தித் திணிப்பைப் பலமாக எதிர்த்துப் போராட்டம் துவக்கி சுமார் 2000 பேர்களைச் சிறைக்கு அனுப்பியதோடு, நானும் மூன்று ஆண்டு கடின காவல் தண்டனை பெற்றேன்.
இன்றுதமிழ்நாட்டில்சமஸ்கிருதம்என்றஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காவது பயன் படுகிறதா? அதற்கும் நமக்கும் கடுகத்தனையாவது, ஒற்றுமை - பொருத்தம் எவ்வகையிலாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டில் - தமிழர்கள் வாழ்வில், சமயத்தில், சமு தாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும், ஏதாவது ஒரு காரியத்திற்கும் இந்த சமஸ்கிருதம் பயன்படுகிறதா?
உச்சரிக்கவாவது...
மற்றும், தமிழ் மக்கள் தமிழில் எவ்வளவுதான் மேதாவி களாய் இருந்தாலும், அவர்களால் சமஸ்கிருதத்தைச் சரியானபடி உச்சரிக்க முடிகிறதா? தமிழர் யாராய் இருந் தாலும் சமஸ்கிருதம் உச்சரிப்பது என்றால் அது சிறிதாவது கஷ்டமானதும், சரிவர உச்சரிக்க முடியாததுமானதாகவே இருக்கிறது. தமிழ்நாட்டின் சீதோஷ்ண நிலைக்குப் பொருந்தாது - உச்சரிப்பதனால் சரியானபடி உச்சரிக்க முடிவதில்லை; மனிதனின் சக்தியை அதிகம் பயன்படுத்தி ஆக வேண்டும். குளிர்நாட்டு மொழி, சமஸ்கிருதம்; ஆகவே, அது நமக்குப் பேச்சு வழக்குக்கு உதவாததாகும்.
ஒரு மொழியின் தேவை முக்கியத்துவமெல்லாம் அது பயன்படுகின்ற தன்மையைப் பொறுத்ததே ஆகும். அது எவ்வளவு பெரிய இலக்கிய காவியங்களையும், “தெய்வீகத் தன்மையும்“ தன்னிடத்தே கொண்டது என்று சொல்லிக் கொள்ளப்படுவதானாலும் - அது மக்களது அன்றாட வாழ்க்கையில், அவர்களது அறிவை வளப்படுத்தும் தன் மையில் எந்த வகையில் உபயோகப்படும்படி இருக்கிறது என்பதையே அளவுகோலாகக் கொண்டு அளக்க வேண்டும்.
குறிப்பாக - ‘தேவ பாஷை’யான சமஸ்கிருதத்துக்கு உண்டா? என்ற கேள்விக்கு இன்றல்ல - பல ஆண்டு களுக்கு முன்பே, ‘இல்லை’ என்ற பதில் கிடைத்துவிட்டது. அது, பேச்சு வழக்கு இல்லாத ஒரு பாஷை ஆகும். இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள சுமார் 40 கோடி மக்களில் எத்தனை பேர்களுக்கு சமஸ்கிருதம், தாய்பாஷை? எத்தனை பேர்கள் பேசுகிறார்கள்?
மோசடி எண்ணத்தால்...
பார்ப்பனர்கள் வகுத்த அரசியல் சட்டத்தில் அங் கீகரிக்கப்பட்ட 14 மொழிகளில் சமஸ்கிருதமும் ஒன்று என்று சர்வ ஜாக்கிரதையாக எழுதி வைத்துக் கொண்டு இருக்கின்றனர்; இதுவே பெரிய மோசடி எண்ணத்தின் விளைவு என்பேன். சமஸ்கிருதம் பேசுகின்றவர்கள் இந் தியாவிலேயே மொத்தம் 441 பேர். சுமார், அதாவது 500-க்கு குறைந்தவர்கள் என்ற புள்ளி விவரத்தை திரு. பி.ஜி.கேர் தலைமையில் ஏற்படுத்தப்பட்ட இந்திய ஆட்சிமொழிக் கமிஷன் ரிப்போர்ட் (Official Language Commission Report) தெரிவிக்கிறது.இதுகூடபுரட்டுஎன்றுதான்கூற வேண்டும். சமஸ்கிருதத்தை வழக்கில் பேசுகின்ற வர்கள் இந்த நாட்டில் யாருமே இல்லை.

இந்திய சர்க்காரால் ஆண்டு தோறும் வெளி யிடப்படும், இந்திய ஆண்டு வெளியீட்டில் (India Year Book 1960)
உள்ள புள்ளி விவரம் பக்கம் 45ல் தரப்பட்டிருப்பதானதைக் கீழே பாருங்கள்:

இந்தப் புள்ளிவிவரங்களின்படி மிகமிகக் குறைந்த மக்கள் மைக்ராஸ்கோபிக் (பூதக்கண்ணாடி வைத்துத் தேட வேண்டிய அளவு) மைனா ரிட்டியினர் மொழியாகத் தான் (நாம் இந்தப் புள்ளி விவரத்தை ஒப்புக் கொண்டே பேசுவதானாலும் கூட) அது இருக்கிறது.
அப்படிஇருந்துங்கூடமேலேபலநூறுஇலட் சக்கணக்கான மக்களால் பேசப்படும் பல மொழிகளுக்குக் கிடைக்காத சலுகை இன்று இதற்குத் தரப்படுகிறதே, காரணம் என்ன?
ஏற்ற உண்மைகள்
சமஸ்கிருதமொழிஒருசெத்தமொழிஎன்றஉண்மை (Dead Language) பல்லோராலும் மறுக்காமல் ஒப்புக் கொள்ளப்பட்டஉண்மையாகும்.அதைஉயிர்ஊட்டுவ தற்காகப் பார்ப்பனர்களைக் குடியாட்சித் தலைவர் களாகவும், மந்திரிகளாகவும், நீதிபதிகளாகவும், கொண் டுள்ள இந்த ஆட்சியினர், சமீபகாலமாகச் செய்துவரும் ‘பகீரதப்’ பிரயத்தனங் களும் அதற்காக மற்ற மக்களிடத்தில் கசக்கிப் பிழிந்து வாங்கும் வரிப்பணத்தைக் கரியாக்குவதையும் பற்றி இந்த நாட்டில் உள்ள பொதுமக்கள் தலைவர்களோ, மொழிவல்ல டாக்டர்களோ யாரும் கவலைப் பட்டதாகத் தெரியவே இல்லை.
எடுத்துக்காட்டாக, அக்டோபர் 1956இல் ‘சமஸ் கிருதக் கமிஷன்’ என்ற ஒன்றை இந்திய சர்க்கார் நியமித்தார்கள். இந்தக் கமிஷனின் நோக்கங்கள் யாவை என்பதையும் அரசாங்கத்தினர் சொன்னார்கள். அதன் நோக்கம் பல்கலைக்கழகங்களிலும், வெளியிலும், சமஸ்கிருதத்தை சமஸ்கிருதக் கல்வியைப் பரப்புவதும், அதற்கு மீண்டும் புத்துயிர் ஊட்டுவதுமேயாகும். இந்தக் கமிஷன் தனது அறிக்கையை டிசம்பர் மாதம் 1957-இல் சமர்ப்பித்தது. இதன் சிபாரிசுகளை அரசாங்கம் அப்படியே ஏற்றுக்கொண்டு அதைத் தனது திட்ட மாகச் செயல்படுத்திக் கொண்டு வருகிறது. இந்த ஆட்சிக்குப் பெயர் ஜனநாயகமாம்!
பல இலட்ச ரூபாயைக் கரியாக்குவதன் மூலம் யாருக்கு என்ன நன்மை என்பது ஒருபுறம் இருக் கட்டும்; அரசியல் சட்டத்தில் உள்ள மற்ற 13 மொழி களுக்குக் காட்டாத சலுகை, சமஸ்கிருதத்திற்கு மட்டும் என்ன தேவை? அப்படிச் சமஸ்கிருத இலக்கியத்திற்கும், மொழிக்கும் ஊக்கம் அளிப்பது என்றால் அதைத் தனிப்பட்டவர்களான பிர்லா, கே.எம். முன்ஷி போன்றவர்களால் அதற்கெனவே ஏற்படுத்தப்பட்டுப் பிரச்சாரம் செய்யப்பட்டு வரு கின்ற - பாரதீய வித்யாபவனம், பாரத இதிகாச சமிதி, சமஸ்கிருத விசுவ பரிஷத் போன்றவைகள் செய்து கொள்ளலாம் அல்லவா? மத்திய சர்க்கார் மாத்திரம் இதற்கு ஏன் இவ்வளவு சலுகை காட்ட வேண்டும்? இது மாத்திரம் அல்ல. மத்திய சர்க் காரின் ஆதரவுள்ள ‘சாகித்திய அகடமி’யின் ஆதரவில் சமஸ்கிருதத்தைப் பரப்புவதற்கென்றே ஒரு பத்திரிகையும் (Journal) துவக்கப் பெற்றுச் சில மாதங்களாக நடந்து வருகின்றது.
இதற்கெல்லாம் அடிப்படையான காரணம் என்ன? இவ்வளவு ஆர்வம் செலுத்துவதன் உள் நோக்கம் என்ன? என்று ஆராய்ந்தால்தான் பார்ப்பான் தனது ஆதிக்கத்தையும், ஏகபோக உரிமையையும் பாதுகாப்பதில் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறான் என்பது விளங்கும்.
சுரண்டலின் அஸ்திவாரம்
சமஸ்கிருதம் பரவினால்தான் பார்ப்பான் வாழ முடியும், சுரண்ட முடியும். அதன் நலிவு பார்ப்பன ஆதிக்கத்தின் சரிவு என்பதை உணர்ந்துதான் ஒவ்வொரு பார்ப்பனரும் சர்வ ஜாக்கிரதையாக - விழிப்போடு காரியம் செய்து வருகிறார்கள்.
இல்லாவிட்டால், உலகம் பூராவும் சுற்றி வருகிற ‘சசிவோத்தம்' சர்.சி.பி, இராமசாமி அய்யர், சமஸ்கிருதந்தான் இந்தியாவின் அரசாங்க மொழியாக இருக்கவேண்டும் என்று பேசிவருவாரா? அது மட்டுமா? தமிழைத் தாய் மொழி என்று கூறுகின்ற பார்ப்பனரைக் காண முடிவதில்லையே! தப்பித்தவறி எங்காவது ஒன்று இரண்டு சுட்டிக் காட்டுவீர்களானால், அது வயிற்றுப் பிழைப்பைக் கருதி அப்படி உதட்டளவில் கூறிய பார்ப்பானாக இருக்கும் அவ்வளவுதான்.
‘ரிட்டயரான’ ஒவ்வொரு பார்ப்பன ஜட்ஜ், அதிகாரி, தலைவர் எல்லோருக்கும் எப்படி சமஸ்கிருதத்தைப் பரப்புவது என்பதில்தான் கவலை. அது பரவினால் ஆழவேரூன்றினால் தான் பார்ப்பன சாதித்திமிருக்கு உரம் போட்டது போலவாகும் என்பதை நன்றாக உணர்ந்துதான் அவர்கள் இவ்வாறு தீவிரமாக இதில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

தமிழ் மக்களது மானத்தைப் பார்ப்பனரிடம் அடகு வைத்து
நம்முடைய. மக்களோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல், “நாம் எவனுக்கு வைப்பாட்டி மக்களாக இருந்தால்தான் என்ன? வயிறு நிரம்ப வேண்டியதுதானே!” என்று இருக்கிறார்கள்.
நம்முடைய புலவர்கள் அறிஞர்கள் எல்லோரும் இதைப் பற்றியே நினைக்க நேரமில்லாத மாதிரி காட்டிக் கொண்டு: பார்ப்பானின் காலைக் கழுவி ‘கதி மோட்சம்‘ பெறுவதில் போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் - ஓட்டு - பதவி வேட்டைக்காரர்களோ ‘நாய் விற்ற காசு குலைக்காது - கருவாடு விற்ற காசு நாறாது’ என்கின்ற தன்மையில் எரிகிற வீட்டில் பிடுங்கியது இலாபம் என்று எண்ணித் தமிழ் மக்களது மானத்தைப் பார்ப்பனரிடம் அடகு வைத்துக் கூலி பெற்றுக்கொண்டு இருக்கின்றார்கள்.
இந்நி¬லையில் இதையெல்லாம் எடுத்துக் கூறிப் பேசித் திரிவதற்கு அதன் விளைவுகளைச் சந்தோஷத்தோடு ஏற்பதற்கு என்னைத் தவிர எனது கழகத்தைத் தவிர இன்று இந்த நாட்டில் யார் இருக்கிறார்கள்? யார் இருக்கிறார்கள்? யார் இருக்கிறார்கள்? எனக்குப் பிறகு எங்களுக்குப் பிறகு சிந்தியுங்கள்!
(“விடுதலை”, 15.2.1960)

-விடுதலை,14.8.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக