கேள்வி விடை
கே: கட்சிகள் என்றால் என்ன?
வி: நல்ல லட்சியங்களைச் சொல்லி ஜனங்களை ஏமாற்றி தங்கள் வசம் செய்து சுயநல லாபம் அடைவது.
கே: அப்படியானால் சுயமரியாதைக் கட்சி இதில் சேராதோ?
வி: சேராது
கே: ஏன்?
வி: அது யாரையும் ஓட்டுக் கேட்பதில்லை, பணம் கேட்பதில்லை, உத்தியோகம் கேட்பதில்லை, பதவி கேட்பதில்லை, பட்டம் கேட்பதில்லை. அதுமாத்திர மல்லாமல் அதில் சேர்ந்தவர்களெல்லாம் தங்கள் சொந்த நேரத்தையும், பணத்தையும், செல்வாக்கையும் இக்கட்சிக்குச் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
எது அதிகக் கெடுதி?
- மக்களைக் கோவிலுக்குப் போக வேண்டாம் என்று சொல்லுகிறவர்களால் ஜனங்களுக்கு கெடுதி என்று சொல்வதனால், கோவிலுக்குப் போகும்படி சொல்லு கின்ற வர்களால் அதைவிட அதிகமான கெடுதி என்றே சொல்லலாம்.
- கோவிலை இடிக்கின்றவர்களை விட கோவில் கட்டுகின்றவர்களாலேயே மக்களுக்கு நஷ்டமும், கஷ்டமும் ஏற்படுகின்றன.
- கடவுள் கல்லிலும், செம்பிலும், படத்திலும் இருக்கிறார் என்று சொல்லுகின்றவர்களை விட கடவுள் இல்லை என்று சொல்லுகின்றவர்கள் நல்லவர்கள்.
- -விடுதலை,15.5.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக