வெள்ளி, 5 ஜூலை, 2019

நான் சூத்திரன் அல்ல - பள்ளர், பறையர்!” - தந்தை பெரியார்





பிறர் உங்களை பள்ளர், பறையர் என்று சொல்லி நீங்கள் கேவலமானவர்கள் என்று கருதப்பட்டால் அவர்கள் அதைவிட கேவலமானவர்கள் என்றே சொல்வேன். அவ்வாறு உங்களை கேவலமாகக் கருதுகிற வருக்கு உள்ள பெயரைவிட உங்கள் பெயர் கேவலமானது அல்ல.

யாரேனும் என்னை பள்ளன், பறையன் என்று அழைப்பது மேலா, சூத்திரன் என்று அழைப்பது மேலா என்று கேட்டால் சூத்திரன் என்று அழைக்கவே கூடாது. பள்ளன், பறையன் என்று அழைப்பதுதான் மேல் என்று சொல்லுவேன். ஏனென்றால் சூத்திரன் என்னும் பெயர் அந்தப் பெயர் களைவிட மிகவும் இழிந்ததாகும்.

ஜனத்தொகை எடுக்கும்போதும் நான் பள்ளர், பறையர் என்றுதான் சொல்லுவேன். பள்ளர், பறையர் என்பவராகினும் சொந்த தாய் தகப்பன்மார்களுக்குப் பிறந்தவர் ஆவார்கள்.

ஆனால், சூத்திரர் என்பவர்களோ பார்ப்பானின் வைப்பாட்டி மக்கள் என்று அழைக்கப்பட்டு போய்விட்டது. இப் பொழுது உள்ள அரசாங்கத் துறையின் வித்தியாசத்தால் வேண்டுமானால் அப்படி இல்லை என்று சொல்லிக் கொள்ளலாம். ஆனால், பழைய இராம ராஜ்ஜியம் வருமா னால் அப்படித்தான் இருக்க வேண்டும்.

நீங்கள் உங்களைவேளாளர்கள் என்று அழைத்துக் கொள்ள ஆசைப்படுகிறீர்கள். வன்னியர்கள் தங்களை சத்திரியர்கள் என அழைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். செட்டியார்கள் வைசியர்கள் என அழைத்துக்கொள்ள ஆசைப்படுகிறார்கள். இதெல்லாம் எதற்காக?

நீங்களே உங்களை தாழ்மைப்படுத்திக் கொள்வற்கு ஒப்பாகிறதே என்றால், “என்னய்யா! இப்பொழுதுதான் எங்கள் பெற்றோர்களை திருத்திக் கொண்டிருக் கிறோம். அதற்குள் இப்படி கீழே தள்ளு கிறீர்களே” என்கின்றனர்.

நாடார் பெரு மக்களும் ஆரியர் வழியைப் பின்பற்றுவது போன்று குறுக்கே பூணூல் போட்டிருந்தனர். அவைகளை எல்லாம் அறுத்து எறியுங்கள் என்கின்ற போது, ஒரு அன்பர் ஏனய்யா இவ்வளவு காலம் போராடி அந்தப் பூணூல் போடுவதற்கு இவ்வளவு காலம் ஆயிற்று. அந்த நூலில் அழுக்கு ஒட்டுவதற்கு முன் அறுத்தெறிய சொல்லுகிறீர்களே என்று வருந்தினார்.

இவ்வாறு சத்திரியர் என்றும், வைசியர் என்றும், வேளாளர் என்றும் அழைத்துக் கொள்ள ஆசைப் படுவதும், பூணூல் முதலியன போட்டுக்கொள்ள ஆசைப் படுவதும், தன் ஜாதியைத் தவிர, தனக்கு மேல் பெரிய ஜாதி இருக்கிறதென்று ஒப்புக்கொண்டு தாங்கள் அந்த ஜாதிக்கு கீழ்ப்பட்டவர்கள் என்ப தையும் ஒப்புக் கொண்டவர்களாக ஆகிறார்கள்.

எல்லோருக்கும் உயர்ந்த ஜாதியான் என்று கூறிக்கொள்கிறவன், சத்திரியரே வைசியருக்கு மேல் உயர்ந்தவர் என்றும், வைசியனை சூத்திரனுக்கு மேலானவன் என்றும் பாகுபடுத்திக் கூறினாலும் அந்த இரண்டு பேரையும் ஒரே கண்ணுடன் பார்த்து, ஒரேமுறையில்தான் நடத்துகிறான். ஆகவே, இந்த மூன்று பேர்வழிகளுக்குள் அவனுக்கு யாதொரு வித்தியாசமும் இல்லை .

இரயில்வே முதலிய சிற்றுண்டிச் சாலைகளுக்கும், சாப்பாடு விடுதிகளுக்கும் சென்று பார்ப்போர் இதை உணருவதில் லையா? அங்கே சாப்பிடுவதற்கு இரண்டு பாகங்கள்தான் இருக்கின்றன.

ஒன்றில் பார்ப்பான் சாப்பிடுவதற்கும், மற்றொன்றில் சத்திரியன், வைசியன், சூத்திரன் ஆகிய எல்லோரும் சாப்பிடு வதற்குமே இருக் கின்றன.

இதில் என்ன வித்தியாசத்தைக் காணு கின்றீர்கள்? உண்மையில் அவன் மட்டும் உயர்ந்தவனாகவும் மற்ற மூன்று பேரும் அவனுக்கு ஒரே முறையில் தாழ்ந்திருப்ப தாகவும் தானே அவ்வறைகள் உணர்த்து கின்றன. பிறகு எதற்காக நீங்கள் நான் சத்திரியன், நான் வைசியன், நான் வேளாளன் என்று உயர்வு தாழ்வு பேசுகிறீர்கள்?

- ‘திராவிடன்’  - 05.10.1929
- விடுதலை ஞாயிறு மலர், 22.6.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக