வெள்ளி, 5 ஜூலை, 2019

தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவக்கியது ஏன்?



எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர் ஒன்றான தாலே என்றார் பாரதிதாசன்.  காரணம் அவரது காலத்திலும் இந்து மதம் என்ற சொல்லாடல் இல்லை. இருந்தும் சாதி பேதத்தைத் தந்த பார்ப்பன பூ நூல் சாதி ஆங்காங்கே ஒற்றுமையாக இருந்து தமிழ்நாட்டை கையகப்படுத்தியது.  கேரளாவை கையகப்படுத்தியது.  ஆந்தி ரத்தை கையகப்படுத்தியது.  அதற்கு அவர் களுக்குக் கை கொடுத்தது அவர்களின வேத மதம். அப்போது பூ நூல் ஏலா சாதி யாகிய இந்திய நாட்டவனை சிவ மதமா கவும் வைணவ மதமாகவும் பெயரிட்டு அதே பூ நூல் சாதி கூறு போட்டது.  அதற்கு முன்பாக இந்திய நாடு முழுவதும் சமண மாகவும் புத்தமாகவும் பூ நூல் கருத்துகள் தருகின்ற மடமைகளை அழித்தொழித்த போது மண்ணின் மைந்தன் தமிழனாகத் தான் அடையாளப்படுத்தப்பட்டான்.  அப் படி அறிவித்த அடையாளச் சொல்தான் திராவிடம்.

எனவே திராவிடம் என்ற தென்னிந்திய மக்கள் தொகுப்பை அறிவித்த அசோகரின் கல்வெட்டு காலத்தில் தமிழன் தன்மானத் தோடு வாழ்ந்திருக்கிறான்.  அத்தகைய வாழ்வியல் சிந்தையை தமிழ்க் கலாச்சாரம் என்பர். அதனை தமிழப் பண்பாடு என்பர்.  அதாவது பார்ப்பனர் அல்லது பூ நூல் சாதியின் கலாச்சார பண்பாட்டுக் கூறுகளா கிய வேதம் வேள்வி யாகம் சாதிமுறை பிரிவு அன்று இல்லை.

அன்று தமிழர்களின் பண்பாட்டில் வேற்று மொழி வழி வாழ்வியல் முறைமை இல்லை. தமிழில் எழுதப்பட்ட வாழ்வியல் கருத்துகளே அறமாக சட்டமாக தமிழினத் தையும் இன்றைய தென்னிந்தியாவையும் கோலோச்சியது.  இதனை உணர்வது கடி னம்தான்.

இன்று நாடாளும் மன்னன் ஒரு பிரச்சினையை எதிர் கொள்கிறான்.  அது நாட்டு மக்களின் பிரச்சினை.  அப்போது மந்திரி சபை கூடும்.  பிரச்சினையைத் தீர்க்க வழி வகை என்ற செயலை வினையை விவாதித்து ஒரு முடிவிற்கு வருவர்.

அதற்கு உரிய செலவுக்கு உரிய பணம் பொருள் எவ்வளவு என்றே தீர்மானிப்பார்கள்.  பணி துவக்கப்படும்.  பிரச்சினை முடிவிற்கு வரும். துன்பம் தீரும்.  இன்பம் மலரும்.  இது அன்றைய வாழ்வியல் கூறு (அங்கம்). இதனையே பண்பாட்டுக் கூறு என்பார்கள். ஒருவன் இடையில் வேட்டி அணிந்து தோளில் துண்டு போடு கிறான் என்பதை தமிழரின் அடையாளம் என்பர்.  தமிழ்க் கலாச்சாரம் என்பர்.  ஒரு தோற்றம் ஒரு இனத்தின் நாகரிகத்தின் அடையாளமாகிறது.  வேதம், வேள்வி, நாகரிகம் என்பது யாருடைய நாகரிகத்தின் அடையாளம் என்பது புரிகிறதல்லவா? ஆகவே அன்று பார்ப்பனர் படையெடுத்து வந்தனர். அதற்கு முன்பு இந்திய மண்ணில் பூ நூல் என்பது இந்திய மண்ணின் மைந் தனது சாதியின் அடையாளமாக இல்லை.  அதாவது பூ நூல் அணிபவன் இந்தியன் அன்று.

ஆனால் பார்ப்பனரின் வரவில் இந்தியாவில் இரண்டு விதமான மனிதத் தொகுப்புகளைக் கொண்டதாகியது.  அதன் கலாச்சார அடையாளமாக பூநூல் ஏற்பும் பூ நூல் எதிர்ப்புமாக புத்த மதம் கொண்டது.  அத்தகைய எதிர்ப்பு தந்தை பெரியார் அவர்களது காலத்திலும் இந்திய நாடு (1) பூ நூல் சாதி மற்றும் (2) பூ நூல் ஏலா சாதி என்ற ஒன்றாக பிரிந்தே நின்றது.  அது மட்டுமன்று பூ நூல்!

சாதி பூ நூல் அற்ற சாதிகளை சூத்திரன் என்றே அழைத்தது.  அவர்களது மொழி எழுத்துகளில் இந்தியாவில் (1) பிராமண சாதி மற்றும் (2) சூத்திர சாதி என்றே பொறிக் கப்பட்டது.  சாதி இரண்டொழிய வேறில்லை என்பதன் உண்மை நிலை இதுதான்.

தமிழினம் பூ நூல் ஏலாச் சாதியாக ஒன்றிணைய வேண்டும் என்ற விழைவை தமிழ் அறிஞர்கள் கொண்டார்கள்.  இத னையே இங்குள்ள தமிழர்கள் ஒன்றாக இணைந்தே எதிரிகளை எதிர்கொண்டார் என்ற கருத்தில் பாட்டெடுத்தனர்.  இத னையே மேலே இங்குள்ள தமிழர்கள் ஒன்றானதாலே என்பது பாரதிதாசன் அவர்களது கவிதை வீரமாகியது.  அன்றும் தமிழினம் ஆயிரம் ஆயிரம் சாதிப் பெருமையில் தன்னை இழந்து நின்றது. பிரிந்தே நின்றது. பார்ப்பனரின் அடிமை யாகக் கிடந்தது. காரணம் தமிழினம் பார்ப் பனரின் கலாச்சாரமாகிய மனு சாத்திரக் கருத்துகளை ஏற்றது. அது கூறுகின்ற சூத் திரப் பட்டத்தை ஏற்றது. இப்படி ஏற்றுக் கொள்கிற நிலைமையை பார்ப்பனர் ஆட்சி செய்கின்ற மன்னனின் ஆணையாக்கினர்.  கால ஓட்டத்தில் அடுத்த அடுத்தத் தலை முறையினர் தம்மிடம் திணிக்கப்பட்ட ஒரு பட்டத்தை பட்டயத்தை பெருமை தரும் குறியீடாகக் கொண்டனர்.

சூத்திரப்பட்டம் தொடர்ந்தது.  அப் பட்டம் தமது சுய மானத்தை சுயமரியாதை யைச் சுட்டொழித்த பண்பாட்டு படை யெடுப்பின் அவலம் என்பதை அறியார்.

அப்போது தந்தை பெரியார்தான் சுய மரியாதை என்ற குறியீட்டை முன்வைத் தார். அதனை ஒரு இயக்கமாக்கினார்.  சுயமரியாதை இயக்கமாக்கினார்.  தமிழினம் பூ நூல் ஏலா சாதி என்ற பரப்புரையில் ஒன்றுபடுத்தினார். புத்தரின் புனிதப் போரை கையில் எடுத்தார். இந்திய நாட்டை பூ நூல் ஏலா சாதிகளின் கையில் ஒப்புவிக்க முயன்றார்.   பார்ப்பனரின் கலாச்சாரத்தை எதிர்த்தார்.

அவர்களின் இராமாயண - மகாபாரத இதிகாசம் என்பது பூ நூல் கலாச்சாரத்தின் படையெடுப்பு பண்பாட்டுப் போர் என்பதை அறிக என்றார்.  மனு சாத்திரம் இந்திய நாட்டவனை சூத்திரனாக்கி தீட்டு முறை தந்து சாதியினால் பிரித்த சதிகளை அம்பலப்படுத்தினார்.  சாதி மறு என்றார்.  வேள்வி மறு என்றார்.

யாகம் வேண்டா என்றார். காரணம் அவை பூ நூல் ஏற்பு தருகின்ற பண்பாட்டு படையெடுப்பு என்றார். புரியலையே! என்பார் உண்டல்லவா?

போர் என்றால் ஆயுதம் ஏந்தி எதிரியை பணிய வைப்பதுதானே!  அது போல் பூ நூல் சாதி தமது ஆரியக் கலாச்சாரமாகிய வேதத்தை முன்னிறுத்தியது.  வேதம் ஒரு ஆயுதம். அது போல் வேள்வியும் யாகமும் அவர்களது ஆயுதம். அதனை ஏற்று தலைகுனிந்து கும்பிடும்போது தோற்பது  பூ நூல் ஏலா இனமாகிய இந்திய இனம்.

தமிழ் இனம் என்பதை தந்தை பெரியார் தெளிவாக உணர்த்தினார். (அனைத்து ஜாதியினரும் அருச்சகர் ஆக வேண்டும் என்பதை பார்ப்பனர் எதிர்ப்பதன் பின் புலம் அறிக). வேத மறுப்பு வேதியர் எதிர்ப்பு மனு நூல் எரிப்பு இராமாயண அழிப்பு என்ற போராட்டத்தை கையில் எடுத்தார்.  சாதி ஒழிப்பும் கல்வியை இலவசமாக்கியும் திராவிட கட்சிகள் ஆட்சியில் அமர்ந்து மன்னராக மாறியபோது சட்டம் இயற்றினர்.  எந்த முறையில் ஒரு சட்டமாக்கி இந்திய நாட்டினரை சூத்திரன் என்றனரோ,  அதே முறையில் அண்ணாவின் அரசாணையால் ஒழிக்கப்பட்டது.  பிரச்சினைக்குத் தீர்வாக அறிஞர்களின் குழுக்கள் கூட்டப்பட்டது.  அய்ம்பெருங்குழுவும் எண்பேராயமுமாக தமிழினப் பண்பாடும் மீட்டெடுக்கப்பட்டது.

அதாவது பிரச்சினைக்கு பார்ப்பனரின் கலாச்சாரமாகிய யாகம் வேள்வி அருச் சனை சிலைவழிபாடு என்பதை நாட வில்லை. நேற்று நடந்தது என்ன? தமிழ் நாட்டு அமைச்சர்கள் கூடி மழை வேண்டி யாகம் நடத்தினர். அதாவது பார்ப்பனரின் பண் பாட்டுப் போரில் இன்றைய தமிழினத்தின் அரசு தலைகுனிந்து தன்மானத்தை சுய மரியாதையை இழந்து விட்டது.  வெட்கம் கெட்டது. கலாச்சாரப் போர் புரிகிறதா?  திராவிடம் புரிகிறதா?  தந்தை பெரியாரின் புனிதப் போர் புரிகிறதா?  பூ நூல் ஏலா சாதிகளாக தமிழினம் இன்றும் ஒன்றாதல் வேண்டும் என்ற பாரதிதாசனைப் போற்றுவோம்.  தமிழர் பண்பாட்டை மீட்டெடுப்போம். இல் லையேல் நாளை வரும் அரசு பிரச்சி னைக்குத் தீர்வு சிலை வழிபாடாக்கி சட்டம் இயற்றும். கடவுள் பார்த்துக் கொள்வார் என்றே நகும். ஏ பாவிகளே என்றும் கூவும்.  மக்கள் செய்த பாவமே தண்ணீர் பஞ்சத்திற்குக் காரணம் என்றே அறிவிக்கும்.  ஆபத்து அறிக. திராவிடம் காப்போம்.

தெலுங்கன் என்றும் கன்னடன் என்றும் கேரளன் என்றும் கூறி பிரித்தாளும் பூ நூல் மதத்தின் பின்புலம் அறிக.  சதுர்வேதம் மயா சிருஷ்டம் என்று கூறும் கடவுள் தமிழினத்தின் பகையாளி.  கோயில் சிலை பூ நூல் போட்டு நிற்கும் பூ நூல் சாதி. சதியின் சின்னம்.  அவை தமிழினத்தை சூத்திரனா கவே பார்க்கும்.

தமிழிசை இதனை உணரும் என்று நம்புவோம். பாவலர் சீனி பழனியின் வாழ்க் கைப் போர் இது என்பதையும் உணர்த்த கடமைப்பட்டுள்ளேன்.  வாழி.

- பாவலர் சீனிபழனி, முகநூலிலிருந்து..

- விடுதலை ஞாயிறு மலர், 29.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக