ஞாயிறு, 8 நவம்பர், 2015

விதண்டா வாதம்: ஈ.வெ.ரா.
குசேலருக்கு 27 பிள்ளைகள் பிறந்தது. குடும்பம் பெருத்து விட்டது. அதனால் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் திண்டாடினார் என்று புராணக்கதை சொல்லுகிறது. குசேலர் பெண்சாதி குறைந்தது வருஷத்திற்கு ஒரு பிள்ளையாகப் பெற்று இருந்தாலும் கைக்குழந்தைக்கு ஒரு வருஷமாகி யிருக்குமானால் மூத்த பிள்ளைக்கு 27 வருஷமாவது ஆகியிருக்க வேண்டும்.
ஆகவே 20 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் 7 பேராவது இருந்திருப்பார்கள்?  இந்த 7 பிள்ளைகளும் ஒரு காசுகூட சம்பாதிக்காத சோம்பேறிப் பிள்ளைகளாகவா இருந்திருப்பார்கள்? 20 வருஷத்திற்கு மேம்பட்ட பிள்ளைகளை கூட்டிக் கொண்டு பிச்சைக்கு போக  குசேலருக்கு வெட்கமிருக்காதா? அல்லது இந்தப் பிள்ளைகளுக்காவது மான அவமானமிருந்திருக்காதா?
அல்லது பிச்சை போட்ட கிருஷ்ண பகவானுக்காவது, என்ன? பெரிய பெரிய வயது வந்த பிள்ளைகளைத் தடிப்பயல் களாட்டமாய் வைத்துக் கொண்டு பிச்சைக்கு வந்தாயே, வெட்கமில்லையா? என்று கேட்கக்கூடிய புத்தி இருந் திருக்காதா?
_______________________________
கேள்வி:- என்னடா உனக்கு கடவுள் இல்லையென்று சொல்லுகின்ற அளவு தைரியம் வந்து விட்டதா?
பதில்:- அவர்தான் மனோவாக்குக் காயங்களுக்கு எட்டாதவரென்று சொன்னாயே! அவரை நான் உண்டு என்று சொன்னால் நீயே உனக்கு, எப்படித் தெரியும்? என்று கேட்பாயே? அதனால் தான் என்புத்திக்கு எட்டாததையும் தெரியாததையும் நான் ஒப்புக் கொள்வதில்லை என்று சொல்லி விட்டேன். இதில் என்ன தப்பு?
_____________________________________
கேள்வி:- கடவுள் கருணாநிதி அல்லவா?
பதில்:- கடவுளே நமது மனதுக்கும், காயத்துக்கும் எட்டாதவராயிருக்கும்போது அவர் கருணாநிதி என்பது உனக்கு எப்படித் தெரிந்தது?
பகுத்தறிவு, 1935

திருவள்ளுவர் நாஸ்திகர்
பிச்சை எடுத்து வாழும்படியாக மக்களை கடவுள் சிருஷ்டித்து இருந்தால் கடவுள் ஒழிய வேண்டும் என்று சொல்லி இருக்கிறார். அதாவது இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டிற் பாந்து கெடுக உலகியற்றியான் என்று 1062ஆவது குறளாகச் சொல்லி இருக்கிறார்.
இன்று இவ்வுலகில் பிச்சை எடுத்து வாழும் மக்கள் எந்த மதத்தினராயிலும் எந்த கடவுளை வணங்குபவராயினும், அவரவர்கள் அந்தக் கடவுளால் பிறப்பிக்கப்பட்டவர் களாகத்தான் இருக்க வேண்டுமே ஒழிய, அவனவன் தாய் தகப்பன் முயற்சியால் பிறந்து அவனவன் புத்திக் கேட்டால் சோம்பலால் குறும்புத்தனத்தால் பிச்சை எடுக்கிறார்கள் என்று எந்த ஆஸ்திகனும் சொல்லமாட்டான்.
அப்படிச் சொல் வாராயின் எந்த ஆஸ்திகனும், பிச்சைக்காரர்களுக்கு தருமம் செய்ய முன் வரவுமாட்டான். அது மட்டுமா, எந்த வேதமும் சாஸ்திரமும் பிச்சைக் காரர்களுக்கு தருமம் செய்யும்படி சொல்லவும் முன் வராது. அவவனவோடு மாத்திரமா!
எந்தக் கடவுளும், பிச்சைக்காரர்களுக்கு தருமம் செய்தவர்களுக்கு, மோக்ஷமோ சன்மானமோ, கொடுக் கவும் முன் வராது. ஆகவே, பிச்சைக்காரர் களும், அவர்களது தொழில்களும் கடவு ளால் சிருஷ்டிக்கப்பட்டது என்பதுதான் அவர்கள் முடிவு.
அதனால்தான், திருவள்ளுவர் பொய்யாமொழிப் புலவர் பாத்து நெடுக உலகம் இயற்றியான் என்று துணிவாய்ச் சொல்லி விட்டார். தரித்திரத்தையும், ஏழ்மையையும், பிச்சை எடுக்கும் தன்மையையும் ஒழிக்க வேண்டுமானால் கண்டிப் பாகக் கடவுள் ஒழிக்கப்பட்டாக வேண்டும் என்று சமதர்ம வாதிகளும் சொல்லுகிறார்கள்.
இப்படிச் சொல்லுவதால் திருவள்ளுவர் நாஸ்திகராகும் போது சமதர்மவாதிகள் நாஸ்திகர்களாவதில் எந்த உலகமும் முழுகிப் போய் விடாது. ஆதலால்தான், ஏழ்மையையே ஒழிக்கப் பாடுபடுகின்ற தேசமெல்லாம் முதலில் கடவுளை ஒழிக்கப் பாடுபடும் வேலையையே மேற்பாட்டுக் கொண்டு வருகின்றன போலும்.
பகுத்தறிவு, 1935
-விடுதலை,10.7.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக