சனி, 7 நவம்பர், 2015

திராவிடர் கழக லட்சியம்


திராவிடர் கழகம் ஒரு சமுதாயச் சீர்திருத்த இயக்கம்தான் எந்தவிதமான அரசியலையும் கைப்பற்ற வேண்டும் என்பது அதன் முக்கிய நோக்கமல்ல. இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய திராவிட மக்களின் பிறவி இழிவைப் போக்கி இந்நாட்டில் உண்மைச் சமதர்மம் நிலவும் உண்மையாகவே ஒரு சுரண்டலற்ற இந்நாட்டு மக்களுக்காக,
இந்நாட்டு மக்களின் ஆட்சி, ஏற்படவும் பிரச்சாரம் செய்வதுதான் திராவிடர் கழகத்தின் முக்கியமான வேலை. மற்ற படி நாங்கள் அரசியலில் நேரடியாய்த் தலையிடுவதில்லை என்பதைப் பன் முறை கூறியிருப்பதோடு அந்தப் படியே அரசியலில் நேரடியாய் தலையிடாமல் நடந்தும் வருகிறோம்.
திராவிட மக்கள் யாவருமே பிறவித் தொழிலாளர்களாய் இருப்பதோடு, திராவிட மக்கள் யாவரும் பெரிதும் நடப்பிலும் தொழிலாளிகளாக இருப்ப தால் திராவிடர் கழகம் தொழில்களு டையவும் நன்மையை முக்கியமாகக் கருதி எப்போதும் வேலை செய்து வரு கிறது. இத்துறையில் இது பொதுவுடை மைவாதிகளைவிட, சமதர்மவாதிகளை விட எவ்வளவோ பங்கு மேலான பயன் விளையும்படி தொண்டு செய்து வந் திருக்கிறது.
ஆனால் தொழிலாளர்கள் பலர் மூடநம்பிக்கைக்கும் ஏமாற்றுதலுக் கும் ஆளாகித் திராவிடர் கழகத்தைத் தவறுதலாகக் கருதி வருகிறார்கள். திராவிடர் கழகத்தைத் தொழிலாளர் களுக்கு விரோதமான முதலாளிகள் செல்வவான்கள் கழகமென்றும், சுயராஜ் யத்திற்கு விரோதமான கழகமென்றும் கூறி,
ஒரு சோம்பேறிச் சுயநலக் கூட்டம் தொழிலாளப் பாமர மக்களிடையே துவேஷத்தை ஊட்டி வருவதால் தான் எங்கள் கழகத்தின் மீது திராவிடத் தொழிலாளிகளும், திராவிட இளைஞர் களும் பலர் தவறுதலான அபிப்பிராயம் கொண்ட எதிரிகளுக்குக் கையாள்களாக இருக்கக் காரணமாயிருந்து வருகிறது.
இந்நாட்டில் முதலாளித்துவம் வளர்க்கப்பட வேண்டும் என்பதோ, இந்நாட்டில் சுயராஜ்யம் நிலவக் கூடாதென்பதோ எங்கள் கொள்கை அல்ல. இந்நாட்டில் பாடுபடாமல், கை முதலில்லாமல் மக்களை அடிமையாக்கி சுக போக வாழ்வு வாழ்கின்ற முத லாளிகள் அதுவும் பிறவிப் பரம்பரை முதலாளிகள் யார்?
பார்ப்பனர்கள் தானே! மற்ற முதலாளிகள் என்பவர்கள் நாளைக்கு இன்சால்வெண்ட் ஆகக் கூடியவர்கள் தானே! ஆகவே நாங்கள் பிறவி முதலாளிகளுக்குக் கையாளாக இருப்போமா? அல்லது டெம்பரவரி முத லாளியாகவாவது இருக்கச் சம்மதிப் போமா?
காங்கிரஸ் சுயராஜ்யம் உண்மையான சுயராஜ்யமானால் இந்நாட்டிற்குச் சுதந்தரம் வந்துவிட்டது என்று சொல்லப்பட்ட பிறகும் இந்நாட்டில் ‘பிராமணன், சூத்திரன், “அரிஜன்” அல்லது புலையன், பஞ்சமன், நாயாடி ஏன் இருக்க வேண்டும்?
என் அருமை காங்கிரஸ் திராவிடத் தோழர்களே! நாம் யாவரும் ஒரே இனத்தைச் சேர்ந்தவர்களல்லவா! ஒரே தாய்வயிற்றுப் பிள்ளைகள் அல்லவா? இந்நாட்டுப் பழங்குடி மக்கள், இந் நாட்டுச் சொந்தக்காரர்கள் அல்லவா! இந்த நாட்டை ஆண்ட மன்னர்கள் பரம்பரை அல்லவா!
நாம் கட்டின கோவில், நாம் வெட்டின ஆறு, குளம், நாம் விட்ட மானியம் தானே இன்று எங்கும் காணப்படுவன? அப்படியிருக்க நீங்கள் இந்நாட்டு நலனுக்கு ஆக, ஒரு சொட்டு வேர்வைகூட சிந்தியிருக்காத சோம்பேறிப் பார்ப்பனக் கூட்டத்தின் சதிச் செயலுக்கு ஆளாகிச் சூத்திரப் பட்டத்தை, இழிவை, மடமையை ஏழ் மையை சுமந்து கொண்டு திரியலாமா?
- ஈ.வெ.ரா
‘விடுதலை’ 24.10.1973 தலையங்கம்
‘விடுதலை’ ஞா.ம.,31.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக