ஞாயிறு, 15 நவம்பர், 2015

தந்தை பெரியார்தம் தத்துவ முத்துக்கள்


நான்
நான் ஒரு சுதந்திர மனிதன் எனக்கு சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப் பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களை சுதந்திர நினைப்பு, அனுபவம், உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து ஒப்பக்கூடியவற்றை ஒப்பி, தள்ளக் கூடியவற்றைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலே தான் எதையும் தெரிவிக்கிறேன்.
எப்படிப்பட்ட பழைமை விரும்பிகளானாலும், இதற்கு இடம் கொடுக்கவில்லையானால் அது நியாயமும் ஒழுங்கும் ஆகாது.
உங்களுக்கு இவை உண்மை யெனப் புலப்படுமாகில் அவற்றை, உண்மையென ஒப்புக்கொள்ளுவதில் மட்டும் பிரயோஜனமில்லை; அவற்றை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன் படி நடக்க முயற்சி செய்யுங்கள்!
எனது சொந்த அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பது தான் என்னுடைய விடுதலை.
அவற்றை ஆராய்ந்து அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை!
2) என் பணி
நான் திராவிடர் சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமு தாயத்தினரைப் போல மானமும் அறி வும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை மேற்போட்டுக் கொண்டு அதே பணியாய் இருப்பவன்.
அந்தத் தொண்டு செய்ய எனக்கு யோக்கியதை இருக்கிறதோ, இல் லையோ, அந்தப்பணி செய்ய யாரும் வராததினால், நான் அதை மேற் போட்டுக் கொண்டு தொண்டாற்றி வருகிறேன்.
இதைத் தவிர வேறு பற்று ஒன்றும் எனக்கு இல்லாததாலும், பகுத்தறிவையே அடிப்படையாகக் கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும், நான் அந்தத் தொண்டுக்குத் தகுதியு டையவன் என்றே கருதுகிறேன். சமுதாயத் தொண்டு செய்பவனுக்கு இது போதும் என்றே கருதுகிறேன்!
3) மனச்சாட்சியின் படியே...
எனது வார்த்தைகளும், எழுத்துக் களும், செய்கைகளும், தேசத் துரோகம் என்றும், வகுப்பு துவேஷமென்றும், பிராமண துவேஷமென்றும், மான நஷ்டமென்றும், அவதூறு என்றும், ராஜதுரோகம் என்றும், ராஜ துவேஷமென்றும், நாஸ்திகமென்றும், மததூஷணை என்றும் சிலர் சொல் லவும், ஆத்திரப்படவும் ஆளானேன். அரசியல் தலைவர்கள், தேசாபி மானிகள், தேசபக்தர்கள் என்பவர் கள் என்னை வையவும் என்னைத் தண்டித்து ஜெயிலில் வைக்கும்படி அரசாங்கத்தைக் கெஞ்சவும் ஆளா னேன், இந்த இன்பமற்ற காரியங் களை நான் ஏன் செய்ய வேண் டும்?
சிலருக்காவது மன வருத்தத்தை யும், அதிருப்தியையும் கொடுக்க தக்க காரியத்தை ஏன் செய்ய வேண்டும்? என்று நானே யோசிப்பது உண்டு. சிற்சில சமயங்களில் யாரோ எப்படியோ, போகட்டும்? நாம் ஏன் இக்கவலையும், இவ்வளவு தொல் லையும் அடைய வேண்டும்? நமக் கென்ன இதனால் ஜீவனமா?  பணம், புகழ், கீர்த்தி, சம்பாதனையா? ஏன் நமக்கு இத்தனை எதிரிகள்? ஒரு பத்திரிகையாவது உதவி உண்டா? ஒரு தலைவராவது உதவியுண்டா? ஒரு தேச பக்தராவது உதவி உண்டா? இமயமலை வெயிலில் காய்கிறது என்று குடை பிடிப்பதுபோல் இருக் கிறது என்பதாகக் கருதி விலகி விட லாமா? என்று யோசிப்பதுண்டு ஆனால் விலகுவதில் தான் என்ன லாபம்?
ஏறக்குறைய நமது ஆயுள் காலமும் தீர்ந்துவிட்டது. இனி நான்கோ, அய்ந்தோ அல்லது அதிகமாயிருந் தால் பத்து வயது காலமோ இருக்க லாம். இந்த கொஞ்ச காலத்தை ஏன் நமது மனச்சாட்சிக்கு விட்டுவிடக் கூடாது? விலகித்தான் என்ன பெரிய காரியம் செய்யப் போகிறோம்? என்ப தாகக் கருதி மறுபடியும் இதிலேயே உழன்று கொண்டிருக்கிறோமே அல்லாமல் வேறில்லை!
(குடிஅரசு -_ 1.5.27)
4) தோழர்களே...!
சரீரத்தினால் நெற்றி வியர்வை சொட்டக் கஷ்டப்படும் மக்களைப் பாருங்கள். வேலையில்லாமல் திண்டாடும் மக்களையும் அவர்களது பெண்டு பிள்ளைகளின் பட்டினி யையும், கொடுமைகளையும் பாருங் கள்; வீடு வாசல் இல்லாமல் மூட்டை முடிச்சுகளைத் தலையில் சுமந்து கொண்டு கஞ்சிக்கு ஊர் ஊராய் திரியும் கூலி மக்களைப்பாருங்கள். இவ்வித மக்கள் உலகில் எங்கெங்கு யார் யாரால் கஷ்டப்படுத்தப்படு கிறார்கள் என்பதையும் பாருங்கள்
உயர்ந்தவன்    -    தாழ்ந்தவன்
பார்ப்பான்    -    பறையன்
முதலாளி    -    தொழிலாளி
குரு        -சிஷ்யன்
மகாத்மா    -    சாதாரண ஆத்மா
அரசன்    -    குடிகள்
அதிகாரி    -    பிரஜை
என்பவை முதலாகிய பாகு பாடுகளை இடித்துத் தள்ளி தரை மட்டமாக்குங்கள். அவற்றின் மீது தேசம், மதம், சாதி என்கின்ற பாகு பாடு இல்லாததும், மனித சமூகம் சம உரிமை - சமநிலை. என்கின்ற கட்டி டத்தைக் கட்டுங்கள். இதைச்செய்ய நீங்கள் உலகில் உள்ள கஷ்டப்படும் எல்லா மக்களுடனும் சாதி, மதம், தேசம் என்கின்ற வித்தியாசம் இல் லாமல், பிரிவினைக்கு ஆளாகாமல் ஒன்று சேருங்கள்!
அப்போது நீங்கள் கண்டிப்பாய் வெற்றி அடைவீர்கள்!
- குடிஅரசு 2.11.32
5) பகுத்தறிவு
சமுதாயத்துறையில் இன்றுள்ள வேற்றுமை, பகைமை, துவேஷம், இழிவு, தரித்திரம், மடமை முதலிய குணங்கள் மனிதன் அறிவுக் குறை வினால், பகுத்தறிவு இல்லாததினால் அல்லது பகுத்தறிவை செவ்வனே பயன்படுத்தாததினால் ஏற்பட் டவையே. மக்களுக்கு மானத்தையும் அறிவையும் புகட்டும் தொண்டுதான் உயர்ந்த சமதர்மத் தொண்டாகும்.
பகுத்தறிவு என்பது ஒரு மனிதன் ஒழுக்கமுடையவனாக இருக்க வேண்டும் என்பதையும், மற்ற மனி தர்களுக்கு தன்னாலான தொண்டு உதவி செய்ய வேண்டும் என்பதையும் தத்துவமாகக் கொண்டதும் ஆகும்.
பகுத்தறிவுக்கு ஈடானது உலகில் வேறு எதுவுமே இல்லை. அதைப் பயன்படுத்தாமல் துருப்பிடிக்க விடாதீர்கள். அதைத் தங்கு தடை யின்றி தாராளமாய் பயன்படுத்துங் கள் மனிதராகுங்கள்!
பகுத்தறிவுவாதி என்பவன் தனது வாழ்வில் சராசரி மனிதர் வாழ்க்கைத் தரம் என்னவோ அந்தப்படி நடந்து கொள்வதை நடப்பு இலட்சியமாகக் கொண்டவனாக இருக்க வேண்டும்!
வாழ்க்கையின் இலட்சியமே மனித சமுதாயத்திற்கு தொண்டாற் றுவது என்பதுதான். தனக்காக மட்டும் வாழ்வது என்பது ஒழுக்க மாக ஆக முடியாது. சமுதாயத்திற் காக பணிபுரிய வேண்டும். ஒழுக்கத் தோடு வாழ்கிறேன் என்று உங்கள் வீட்டுக்கதவை மூடிக்கொண்டு வாழாதீர்கள்!
6) விடுதலை
உண்மையான விடுதலை உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் இழிவுக்கும், அடிமைத்தனத்திற்கும் அஸ்திவாரமான ஆதாரத்தை அழிக்க நீங்கள் தைரியம் கொள்ள வேண்டும். அந்தத் தைரியம் எவ்வித கட்டுப் பாடுகளையும், நம்பிக்கைகளையும் உடைத்தெறியத் தக்கதாய் இருக்க வேண்டும்.
ஏழையாயிருப்பதும், செல்வவானா யிருப்பதும், கடவுள் செயல் என்கிற எண்ணத்தை மக்களிடமிருந்து அடியோடு போக்கி செல்வத் தன் மையின் கொடுமைகளையும், புரட் டுகளையும் தெளிவுபடுத்திவிடுவதும், அதுபோலவே அரசாங்கமும், கடவு ளுடைய கட்டளை என்பதை மாற்றி ஜனங்களுக்காக எல்லோரையும் சமமாய் நடத்தும் சமதர்ம ஆட்சி தான் நிலைபெறவேண்டிய ஆட்சி என்பதை நிரூபிப்பது, இதற்கு இடை யூறாக வரும் சமயக்காரனையோ, சாமி பக்திக்காரனையோ, பண்டி தனையோ, பணக்காரனையோ, அரசாங்கத்தையோ, ஆட்சியையோ முடிவு வரையில் எதிர்த்து நிற்பதே நமது நோக்கமாககும்!
7) அழிவு வேலையை?
நமது இயக்கம் சீர்திருத்த இயக்க மல்ல; ஆனால், அழிவு வேலை இயக்கம் என்றே சொல்வேன். சீர்திருத்தம் என்றால் எதைச் சீர்திருத்துவது? இன்றைய நிலையில் மனித வாழ்க்கைக்கு, சமத்துவத் தன்மைக்கு பொரும்பாலான மக்க ளாகிய ஏழை மக்கள் படும் கஷ்ட மும், தரித்திரமும், இழிவும் நீங்கு வதற்கு அனுகூலமாக என்ன கொள்கைகள், நடைமுறைகள் இங்கு இருக்கின்றன என்று பாருங்கள். அதாவது மத சம்பந்தமாகவோ, கடவுள் சம்பந்தமாகவோ ஏதாவது ஒரு கொள்கை மனித சமூக ஜீவகாருண்யத்திற்காவது, சமுதாயத்திற்காவது ஏற்றதாய் இருக்கிறதா? இருந்தால்தானே சீர்திருத்தம் செய்வீர்கள்? இவைகளில் எதைச் சீர்திருத்தம் செய்ய நினைத் தாலும் அவை இன்னும் வெகுகாலம் நிலைத்திருப்பதற்குத்தான் பயன் படுமே தவிர மாறுதலை உண்டாக்க முடியாது. இவைகளை எல்லாம் அழித்து ஒழித்தாலொழிய கஷ்டம் நீங்கப்போவதில்லை!
8) நீயே ஒப்புக்கொள்கிறாயா?
கடவுளை உண்டாக்கியவன் முட்டாள் என்பதற்காக கோபித்துக் கொள்ளும் சிகாமணிகளே! நான், கடவுளை உண்டாக்கியவன் முட் டாள் என்றால் - எதற்காக நீங்கள் கோபித்துக்கொள்ள வேண்டும்? உண்டாக்கியவன் முட்டாள் என் றால் உண்டாக்கியவன் யார்? அச் சொல் யாரைக்குறிக்கிறது? கோபிக் கின்றவனே! நீ, கடவுள் உண்டாக்கப் பட்டது என்பதை ஒப்புக்கொள் கிறாயா? கடவுளை உண்டாக்கியவன் ஒருவன் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்ளுகிறாயா?
9) பதில் எங்கே?
என்னைப் பொறுத்தவரையில் என் தொண்டின் தன்மை என்ன? மக்களைப் பார்த்து, ஏ.காட்டு மிராண்டிகளே...! என்றும் மானங் கெட்டவர்களே என்றும் தான் கூறுகிறேன். ஒரு இடத்திலாவது, யாராவது எழுந்திருந்து எதிர்த்துக் கேட்கவில்லையே! கடவுளைப்பற்றி எவ்வளவு கடுமையான கருத்துக் களைச் சொல்லி வருகிறேன். யாராவது மரியாதையாக - ஒழுங் காகப் பதில் சொல்லி இருக் கிறார்களா? கடவுள் பக்திக்கார னைத்தான் கேட்கிறேன் சொல் லட்டுமே.
(விடுதலை -9.10.72)
விடுதலை,19.10.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக