திங்கள், 9 நவம்பர், 2015

சமத்துவ சமுதாயத்தைப் படைக்கப் பாடுபட்டவர் தந்தை பெரியார்


கர்நாடக அமைச்சர் எச்.சி.மகாதேவப்பா புகழாரம்

பெங்களூர், செப்.20
 சமத்துவ சமுதாயத்தைப் படைக்கப் பாடுபட்டவர் தந்தை பெரியார் என்று கர்நாடக பொதுப் பணித் துறை அமைச்சர் எச்.சி. மகாதேவப்பா தெரிவித் தார்.
தலித் போராட்ட இயக்கத்தின் (சமத்துவம்) சார்பில், பெங்களூரு, காந்தி மாளிகையில் சனிக்கிழமை நடைபெற்ற தந்தை பெரியாரின் 137-ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று, அவரது உருவப்படத் துக்கு மலர்தூவி மரி யாதை செலுத்திய பிறகு, அவர் பேசியதாவது:
மதம், ஜாதி பெயரால் நடந்து வந்த அடக்குமுறை களுக்கு முற்றுப்புள்ளி வைக்க தெற்கே தோன்றிய அதிசய தலைவர் தந்தை பெரியார். மூடநம்பிக்கை கள், தீண்டாமை, பெண் ணடிமைத் தளையைத் தகர்த்தெறிய தள்ளாத வயதிலும் தளராது பாடு பட்டவர்.
மூடநம்பிக்கைகளுக்கு எதிராக தமிழகத்தில் ஒலித்த கலகக்குரல்தான் தந்தை பெரியார். சமத் துவம், சுதந்திரம், மனித நேயம் ஆகிய கொள்கை களை நிலைநிறுத்த இறுதி மூச்சுவரை உழைத்தவர்.
ஜாதி, மதத்தின் பெய ரால் மனிதர்களை பிரித்து வைக்கும் அடக்குமுறைக்கு எதிராகத் தொடர்ந்து போராடியதோடு, சமத்துவ சமுதாயத்தை படைக்க பாடுபட்டவர் என்றார்.
விழாவில், உரிலிங்க பெத்தி மடாதிபதி ஞானப் பிரகாஷ் சுவாமிகள், எம்எல்சி வி.எஸ்.உக்ரப்பா, எழுத்தாளர் சந்திரசேகர பாட்டீல், சமூக சிந்தனை யாளர் கே.எஸ்.பகவான், பெரியாரியவாதி கலைச் செல்வி, இயக்கத் தலைவர் எச்.மாரப்பா உள்ளிட் டோர் கலந்துகொண்டனர்.
-விடுதலை,20.9.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக